விவசாயி


தாய்ப் பாலின்றி இறந்துபோகும் குழந்தையைப்பெற்றெடுத்த தாய் படும் வேதனையைப் போல்

தண்ணீர் இன்றி வாடும் பயிரைக் கண்டபோது விவசாயி வேதனைப் படுகிறான் !

 தாய்ப்பாலையும் சேமிக்க வங்கி இருக்கின்றது

தண்ணீரை சேமிக்கத்தான் யாரும் இல்லை !

இயற்கையைக் குறை சொல்லி பயன் இல்லை

இருக்கும் தண்ணீரை சேமிக்கத்தான் வழி இல்லை 

கண்ணீர் சிந்தவும் விவசாயிக் கண்களில் தண்ணீர் இல்லை

அவர்களைப் பற்றிச் சிந்திக்கவும் நமக்கு நேரம் இல்லை !

Comments

Post a Comment