மூன்றாம் உலகப்போரின் உச்சம்






அதிவேக விஞ்ஞான வளர்ச்சியின் கோரத் தாண்டவம்
கருனை என்ற வார்த்தைக்கும் இடம் இல்லாத அரக்க குணத்தின் உச்சம் மூன்றாம் உலகப் போர்
எங்குத் திரும்பினாலும் சடலங்களின் குவியல்கள் மக்கள் அனைவரும் பயத்தின் உச்சத்தில் தப்பிக்க இடம் இன்றி ஓடுகிறார்கள்  அவர்களது அழுகையும் 
கதறலும் விண்ணை முட்டும்
அளவிற்கு உள்ளது
மூன்றாம் உலகப் போரின் முடிவும் வந்தது 
சமாதானத்தின் முடிவு அல்ல அழிவின் முடிவாக இருந்தது
மக்கள் முப்பது சதவீதம் மட்டுமே உயிர் தப்பினர்
விஞ்ஞானமும் இல்லை மெய்ஞானமும் இல்லை
 கற்கால மனிதர்களைப் போல் மலைக் குகைகளில் 
ஆங் ஆங்கே கூட்டம் கூட்டமாக 
வாழத் தொடங்கினர்
பசியும் பட்டினியும் நோய்களும் அவர்களை மிருகமாகவே மாற்றியது
அவர்களுக்குள் அடித்துக் கொண்டனர் பசியின் உச்சம் ஒருவரை ஒருவர் அடித்துக் 
கொன்று உணவாக உண்டனர்
கற்கால மனிதர்களாகவே
 மாறினர்! 

Comments

Post a Comment