மரம் பேசுது

மரம் வெட்டுபவன் ஒருவன் மரம் வெட்டச் சென்றான்,ஒரு மரத்தை மேலும் கீழும் பார்த்தபடி நின்றான்,
மரம் அவரை பார்த்து என்ன நண்பரே என்னை மேலும் கீழுமா பார்த்தபடி பலத்த யோசனையில் உள்ளீர்கள்.
மரம் வெட்டுபவன் மரத்தைப் பார்த்து உன்னை வெட்ட வேண்டும் அதற்குத் தான் பலத்த யோசனையிலிருந்தேன் எங்கிருந்து உன்னை வெட்ட ஆரம்பிக்கலாம் என்று.
மரம் அவரை பார்த்து நண்பா எங்கிருந்து வேண்டுமானாலும் வெட்டிக்கொள் ஆனால் இப்பொழுது வேண்டாம் இலை உதிர் காலத்தில் என்னை வெட்டிக் கொள் என்று சிரித்தபடி சொன்னது,
மரம் வெட்டுபவன் அது என்ன இலை உதிர்காலம் ஏன் இப்பொழுது வெட்டிக்கொள்கிறேன்,
மரம் அவரை பார்த்து இல்லை நண்பா நன்கு பார் என் மரத்தில் என்னை நம்பி பல பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றனர் ,இம்மரத்தில் உள்ள கனிகளைப் பல உயிரினங்கள் உண்டு வாழ்கின்றனர்
எனது நிழலில் பல உயிரினங்கள் வாழ்கின்றனர், இலை உதிர் காலம் வந்தால் அனைத்து பறவைகளும் வேர் இடத்தை தேடிச் சென்றுவிடும்
அதனால் என்னை இலை உதிர் காலத்தில் வெட்டிக்கொள் உன்னையும் வாழவைப்பேன்
எனது அன்பு நண்பனே!

Comments