மாயோன்



ராதே
 என்ற ஒரு அழகான கிராமத்தில் புத்திக்கூர்மை மிகுந்த, ஒரு அழகான 
ஆண்பிள்ளை வளர்ந்து வந்தார் அவன் பெயர் மாயோன்இந்த உலகத்தோடு அழிவும் இவனால் ஆரம்பிக்கப் போகிறது இந்த உலகத்தோடு
புதிய ஆரம்பமும் இவனால் தான் ஆரம்பிக்கப் போகிறது இவன் அரக்கனும்  இல்லை கடவுளும் இல்லை ஒரு மிகப் பெரிய புத்திசாலி ஒரு மாவீரன் ஆவான்.



இதுவரைக்கும் இருந்த கலாச்சாரம், மதம் சார்ந்த நம்பிக்கை இப்படி எல்லாவற்றிலும் 
புதியதொரு புரட்சியை ஏற்படுத்துவான்.இப்போது இவனுக்கு பத்து வயது உலகம் அறியா சிறுவன் ஆனால் இவனது முப்பதாவது வயதில் இவனால் இந்த உலகில் கலவரங்களும் புரட்சிகளும் ஏற்பட்டு அதுவே உலக நாடுகளிடையே போர் நடக்கக் காரணமாக அமையும்.

மாயோன் மிகுந்த புத்திக் கூர்மை மிக்கவராக இருந்தார் அவருடைய 20 வயதில் அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அந்நாட்டு உளவு படை மாயோனை கடத்தி அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டார்கள்.

மாயோன் மட்டுமின்றி அவரைப் போன்று நூறு இளைஞர்களை வெவ்வேறு இடத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு இருந்தனர் கடத்திக் கொண்டு வந்த அனைத்து இளைஞர்களையும் ஏவுகணை பிரிவில் ஒரு அடிமை போன்று பணி நியமனம் செய்யப்பட்டனர் கடத்தப்பட்ட அனைத்து இளைஞர்களும் 20 வயது உடையவர்கள் அனைவரும் மிகுந்த புத்திக் கூர்மை மிக்கவராக இருந்தவர்கள்.

கடத்தப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ராணுவ பயிற்சி, ஏவுகணை பயிற்சி, இணையவழி தாக்குதல் பயிற்சி, என்று ஐந்து வருடங்கள் கடந்தன.இப்பொழுது குழுவுக்கு ஐந்து பேர் என்று இருபது குழுக்களாகப் பிரித்தனர் இந்த 20 குழுக்களுக்கும் மாயோன் தலைவரானார்.இந்த 20 குழுக்களும் உலகிலுள்ள வல்லரசு நாடுகள் மற்றும் கச்சா எண்ணெய் நிரம்பி வழியும் வளைகுடா நாடுகள் போன்று பல நாடுகளில் உளவு பார்த்து வந்தனர்,பல நாடுகளில் அரசியல் குழப்பத்திற்கும் இவர்கள் காரணமாக இருந்தனர்.

மாயோனின் கட்டுப்பாட்டில் இந்த 20 குழுக்களும் மிகுந்த புத்திக் கூர்மையுடனும் வீரத்துடனும்  செயல்பட்டனர்.மாயோன் மற்றும் தனது 20 குழுக்களை சேர்ந்தவர்களும் உளவு பார்ப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றனர் , அவர்கள் நினைப்பதைச் சாதித்தனர் பல வல்லரசு நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் பல அரசுத்துறையில் இவர்கள் பணியாற்றி வந்தனர்.

மாயோன் மற்றும் அவரது 20 குழுக்களை சேர்ந்த 100 நபர்கள் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டனர் இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றுஅதனால் உலகம் முழுவதும் உள்ள பல தீவிரவாதி அமைப்புகளிடம் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டனர் பல சிறிய அரசியல் கட்சிகளிடமும் ஒப்பந்தம் மேற்கொண்டனர் ,பல தொழிலதிபர்களிடமும்  ஒப்பந்தம் மேற்கொண்டனர் இவ்வாறு மாயோன் மற்றும் அவரது 20 குழுக்களும் இவ்வுலகை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து வழிகளையும் தேடினர்.

மாயோன் முதலில் தனது நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டம் தீட்டினார் தனது நாட்டுத் தீவிரவாதி குழுக்களிடம் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டார் அதன் விளைவு தனது நாட்டு மக்களிடையே  அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சியை ஏற்படுத்தினார் அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் ராணுவத்தில் பல சூழ்ச்சி செய்யத் தொடங்கினார்.ஒருபுறம் மக்கள் புரட்சியின் உச்சம் அரசாங்கம் திணறி வந்தது மற்றொருபுறம் ,மாயோன் தனது சூழ்ச்சியால் ராணுவத்தில் துணைத்தளபதி பதவிக்கு உயர்ந்தார்.

மக்கள் புரட்சியின் உச்சம் இராணுவத்தின் உதவியை நாடியது அரசாங்கம், ராணுவ தளபதியும் துணை தளபதியுமான மாயோன் 
மக்கள் புரட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டம் தீட்டினர்.மாயோன் மற்றொருபுறம் அவரது 20 குழுக்களுடன் சேர்ந்து ராணுவத்தில் புரட்சியை ஏற்படுத்தினர்.ராணுவத்தில் ஏற்பட்ட புரட்சியின் உச்சம் ராணுவ தளபதியை சிறைபிடித்தனர் இப்பொழுது மாயோன் ராணுவ தளபதி பதவிக்கு உயர்ந்தார்.இப்போது ராணுவம் முழுவதும் மாயோனின் கட்டுப்பாட்டில் வந்தது.

மாயோன்  தனது நாட்டு மக்கள் அனைவரையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்.தனது நாட்டில் உள்ள அனைத்து
 தனியார் நிறுவனங்களையும் ராணுவத்துடன் இணைத்தார், தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் ராணுவ பயிற்சி அளித்தார், தனது நாட்டிலுள்ள புத்தி கூர்மை மிக்க இளைஞர்களை ஒன்று திரட்டினார் அவர்களிடம் இவ்வுலகமே அஞ்சி நடுங்கும் அளவிற்கு மிக சிறந்த அணு ஆயுதங்களை உருவாக்கும்படி ஆணையிட்டார்.

மாயோன் என்ற பெயர் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களிடம் ஒரு அபாயத்தை உணர்த்துவது போல் இருந்தது அவர்களது கண்களை  உறுத்தியது  மாயோனின் ராணுவ ஆட்சி .

மாயோனின் ஆட்சிக்கு எதிராக சதி செயல்களை செய்யத் தொடங்கினர் உலக வல்லரசு தலைவர்கள் பொருளாதார தடை இணையவழியில் தாக்குதல் என்று பலவழிகளிலும் புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்கினர் அந்நாட்டில் மதக் கலவரத்தையும் புரட்சியையும் உருவாக்கி மாயோனின்  
ஆட்சியை கவிழ்க்க முயன்றனர் .

மாயோன் உலக வல்லரசு தலைவர்களை திசை திருப்ப தனது உளவு படை மூலம் வளைகுடா நாடுகளுக்கு இடையே கலகங்களை  ஏற்படுத்தினார் இதனால் வளைகுடா நாடுகளுக்கு இடையே குழப்பங்கள் ஏற்பட்டது கச்சா எண்ணெய் வர்த்தகம் நிலை தடுமாற ஆரம்பித்தது உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கவனம் முழுவதும் வளைகுடா நாடுகளின் மேல் திரும்பியது குழப்பத்திற்கு காரணம் மாயோனின் சூழ்ச்சி ஆனால் அந்த குழப்பத்தை ஊதிப் பெரிதாக்கிய பெருமை வல்லரசு தலைவர்களையே சேரும் .

நிலவும் குழப்பத்தை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை வல்லரசு தலைவர்கள் வளைகுடா  நாடுகளிடம் செயல்படுத்தியது அதன் உச்சம் வளைகுடா நாடுகளிடையே போர் மூண்டது.

தனது 30வது வயதில் ஒரு நாட்டையே ஆளும் அளவிற்கு வல்லமையும் புத்தி கூர்மை மிக்கவராக இருந்த மாயோனும் தற்போது உலக அரசியலை கண்டு சற்று  தடுமாற்றமும் குழப்பமும் அடைந்தார்.

உலக அரசியல் புரியாத புதிராக உள்ளது நாம் சுதந்திர நாடு தானே என்ற குழப்பம் சில சமயம்  எழுகின்றது.

மாயோன் தனது 20 குழுக்களுடன்  ரகசிய ஆலோசனை நடத்தினார், குழுவுக்கு நூறுபேர் என்று 20 குழுவுக்கு மொத்தம் 2,000 பேருக்கு பயிற்சி அளித்து  உலகிலுள்ள வல்லரசு நாடுகளுக்கு உளவு பார்க்க அனுப்பும்படி  ஆணையிட்டார். 

அதுமட்டுமின்றி தனது ராணுவ படையில் இருந்து பத்தாயிரம் பேருக்கு  கொரில்லா தாக்குதல் பயிற்சி  அளிக்குமாறு ஆணையிட்டார்.

20 குழுக்களும் மாயோனை பார்த்து எதற்கு இந்த ஆலோசனை எதற்கு இந்தப் பயிற்சிகள் என்ன நடக்கின்றது என்றனர் , மாயோன் ஏதோ ஒரு பயம் என்னுள்  எழுந்துள்ளது  என்றார்.



Comments

Post a Comment