EGO
-
ஈகோ என்பது ஒரு நபரின் சுய உணர்வு, அடையாளம் மற்றும் சுய முக்கியத்துவத்தைக் குறிக்கும் ஒரு உளவியல் கருத்தாகும்.
ஆரோக்கியமான சுய உணர்வுக்கு ஈகோ அவசியம் என்றாலும், அதிகப்படியான ஆதிக்கம் அல்லது ஊதிப்பெருக்கப்பட்ட ஈகோ திமிர், சுயநலம் மற்றும் எதிர்மறை நடத்தைகளுக்கு வழிவகுக்கும்.
-
அதிகப்படியான ஈகோ ஆணவத்திற்கு வழிவகுக்கும், தனிநபர்கள் தங்கள் சுய பிம்பத்தைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் சொந்த உயர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது குறித்து கவலைப்படுவதால் ஈகோ பதட்டத்திற்கு பங்களிக்கும்.
-
குழந்தை பருவத்தில் ஒரு குழந்தை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து தன்னை வேறுபடுத்தத் தொடங்கும் போது ஈகோவின் அஸ்திவாரம் உருவாகத் தொடங்குகிறது.
- ஈகோ பெரும்பாலும் ஆணவத்திற்கு வழிவகுக்கிறது, அங்கு தனிநபர்கள் தங்கள் திறன்களை மிகைப்படுத்தி, தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள்.
நம்ம வாழ்க்கையில நடக்கும் பாதி பிரச்சனைக்கு ஈகோ தான் காரணம்
நம்ப பேசறது சொல்றது மத்தவங்க கேட்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல ஆனா கேட்டு தான் ஆகணும், எண்ணம் எப்ப வருதோ அப்போ ஈகோ ஸ்டார்ட் ஆகுது .
இப்ப நம்ம எல்லாருமே நாய் வளர்க்கிறோம் ஏன்னா நாய் நன்றி உள்ளது , நம்மளையும் நம்ம வீட்டையும் காவல் காக்குது . ஆனா இதெல்லாம் நம்ம ஈகோவ டச் பண்ணாதவரைக்கும் அதாவது நம்ம சொல்றத நாய் கேக்குறவரைக்கும் நாய் நன்றியுள்ளது, எப்ப நம்ம சொல்றதுக்கு எதிர்த்து செயல்படுதோ அந்த நாய் க்கு வெறி பிடிச்சிருக்கு சொல்லுவோம் .
நாய்க்கு வெறி பிடிச்சிருக்கோ இல்லையோ ஆனா ஈகோ ஸ்டார்ட் ஆச்சுன்னா நமக்கு வெறி பிடிக்க ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு அர்த்தம் .
நம்ம சொல்றத மத்தவங்க கேட்டு தான் ஆகணம்னு அவசியம் இல்லை என்ற புரிதல் இருந்தா போதும்.
நம்ம வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் .
Comments
Post a Comment